நோயை மறைத்து வைத்திருக்கும் நபருக்கு மற்றும் அந்த நோய் தொற்றை ஒளித்து வைத்திருக்க நோயாளிக்கு உதவி ஒத்தாசை செய்பவர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவ்வாறே நோய் தொற்று சம்பந்தமாக விபரங்களை விசாரிக்கும் போது, யாராவது ஒருவர் தமது நோய் சம்பந்தமாக விபரங்களை அல்லது தாம் அந்த கால கட்டத்தில் பழகிய நபர்கள் சம்பந்தப்பட்ட விபரங்களை, மறைத்துவைக்க முற்பட்ட சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்னவே இடம்பெற்று வருவதாக அறிக்கைகள் உள்ளதால், இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறான குற்றங்களை மேற்கொள்பவர்களின் அசையும் அசையாசொத்துக்கள், கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் மற்றும் தனிமைபடுத்தும் சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும்.
கம்பஹா மாவட்டத்தில் நேற்று(7) 1034 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஆயினும் 528 நோயாளர்கள் மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தில் தெரிவிக்கப்பட்டதாக நேற்று ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment