யாழ் புங்குடுதீவில் 3000 பேர் தனிமைப்படுத்தலில்..

J.f.காமிலா பேகம்-

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இன்றைய தினம் மேலும் 385 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கமைய, புங்குடுதீவு பகுதியில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், புங்குடுதீவு பகுதியிலிருந்து வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்ற நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது

இதனையடுத்து, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகயாக பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையிலேயே, குறித்த பெண் புங்குடுதீவில் கலந்துகொண்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிற்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்றைய தினம் 380க்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :