20ஆவது திருத்த யோசனைக்கு ஆதரவளிக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
07 உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட எம்.பி மொஹமட் அலிசப்ரி, மட்டக்களப்பு மாவட்ட நஷீர் அஹமட், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரிஸ், பைசால் காசிம், மொஹமட் முஷாரப் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.சி டயானா கமகே ஆகியோரே இவ்வாறு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment