ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி – நகருக்கும் பூட்டு!M.I.இர்ஷாத்
ட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அட்டன் அட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்த அட்டன் நகர மீன் விற்பனையார்களை கடந்த 23 ஆம் திகதி பி.சி ஆர் பரிசோதனை மேற்கொண்டதையடுத்து அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது இந் நிலையில், அட்டன் மார்கட் பகுதி மூடப்பட்டதுடன் குறித்த நபரருடன் தொடர்புடைய 23 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
அதில் குறித்த நபரின் குடும்பத்தின் நால்வர் உற்பட மேலும் ஆறுபேர் அடங்களாக 10 பேருக்கு கொரோனை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அட்டன் நகரை முழுமையாக மூடி கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சடையன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :