கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி முகைதீன் பெரிய ஜும்மா பள்ளிவாயல் மையவாடி இன்று சனிக்கிழமை (26) மாபெரும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்த இச் சிரமதானப் பணியில் பிரதேசத்தில் உள்ள உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள் இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பள்ளிவாயல் மையவாடி சுத்தம் செய்யப்பட்டு உழவு இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
குறித்த சிரமதானப் பணயில் பங்குகொண்ட அனைவருக்கும் கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவை அமைப்பினர் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment