பேக்கரி உரிமையாளர்களுக்கு 16.50 ரூபா விலையில் முட்டைகளை வழங்குவதற்கு அனைத்து முட்டை உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மற்றும் அனைத்து முட்டை உரிமையாளர்கள் சங்கம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அனைத்து முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை விலை அதிகரித்ததன் காரணமாக, பேக்கரி உரிமையாளர்கள் தங்கள் உற்பத்திகளுக்காக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்குமாறு அண்மையில் அரசாங்கத்திடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை விநியோகிப்பதற்கு அனைத்து முட்டை உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment