மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தேவையான வசதியை செய்துகொடுக்கும்படி சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்வை அறிவித்தது.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு கோரி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவின் நாடாளுமன்ற அனுமதி விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானத்தை வெளியிட்டது.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு தமக்கு எந்தவித தடையும் இல்லை என்பதற்கான அனுமதியை வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தமது மனுவில் கோரியிருந்தார்.
0 comments :
Post a Comment