நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
பெய்துவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில் அட்டன் பகுதியில் குடியிருப்பொன்று மண்சரிவினால் சேதமடைந்துள்ளதுடன், அட்டன்,நோர்வூட் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட மென்டிஸ் மாவத்தை பகுதியிலே 06 நேற்று இரவு 07.30 மணியளவில் குடியிருப்பின் பின் புரமுள்ள மதில் உடைந்து வீழ்ந்துள்ளது.
மதில் சரிந்து வீழந்தமையானால் குறித்த குடியிருப்பின் சமையலரை சேதமாகியுள்ளதுடன் குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேலை, அட்டன் நோர்வூட் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment