முஸ்லிங்கள் விடயத்தில் சுமந்திரன் இரட்டை முகத்தை கொண்டவராக இருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது சஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கழகத்தின் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் ஷரீப் ஹக்கீம் ஆகியோர் கெளரவ கலாநிதி பட்டம் பெற்றதை பாராட்டும் நிகழ்வு நேற்று மாலை (27) சாய்ந்தமருது "சீ பிறீஸ்" மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் அங்கு பேசியபோது,
முஸ்லிம் சமூகத்தினை சில அரசியல்வாதிகள் தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்களோடு மோதவிடுகின்ற ஒரு கருவியாக பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறு பெரும்பான்மை மக்களோடு மோதவிடுவதற்கான ஒரு கருவியாக முஸ்லிம் சமூகத்தினை மாட்டிவிடக்கூடாது.
கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு போல தேசிய ரீதியான அரசியலில் முகம் கொடுக்கவேண்டி உள்ளது. அதேநேரம் எமது பிராந்திய முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமையை எங்களுடைய அதிகாரமையத்தினை தக்கவைக்கவேண்டிய நிலையில் நாங்கள் இருந்து கொண்டு இருக்கின்றோம் அதற்கான வழிவகைகளை எங்களது அரசியல் தலைமைகள் செய்யும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.
அதேநேரம் இன்று சம்மாந்துறையில் மறைந்த தலைவரின் நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பேசும்போது முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் சுயநிர்ணய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறைகூவல் விட்டு இருக்கின்றார்.
அதே சுமந்திரன் முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையாக இருக்கின்ற கல்முனை நகரினை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று கடந்த வருடம் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்.இவ்வாறு அவர் இரட்டை முகத்தினை கொண்டு செயற்படுகின்ற சூழ்நிலையில் இன்னும் இன்னும் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களோடு மோதவிடுவதற்கான ஒரு கருவியாக முஸ்லிம் சமூகத்தை மாட்டிவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும்.
ஏனென்றால் தமிழ் சமூகத்தினுடைய போராட்டத்திற்கு வலிமை சேர்க்கின்ற சக்தியாக பெரும் வல்லரசு நாடான இந்தியா இருக்கின்றது. அண்மையில் இந்திய பிரதமர் மோடியினுடைய உரை கூட தமிழ் தலைமைகளுடைய 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக பேசி இருக்கின்றார் ஆனால் முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸா எரிக்கப்பட்ட விடயத்தில் கூட எந்தவொரு வடகிழக்கில் உள்ள தலைமைகளோ, வல்லரசுகளோ! குரல் கொடுக்கவில்லை என்பதன் மூலம் நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எமது சமூகத்தை மிகவும் நுட்பமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு எமது சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும்மன்றி ஒவ்வொரு சமூக ஆர்வலர்களுக்கும் உண்டு என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும் மென்றோ அமைப்பின் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல், வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபான், கல்முனை ஸாஹிறா கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜபீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.ரோசன் அக்தர், எம் எஸ்.எம்.சத்தார், எம்.நிசார் (ஜே.பி), காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.பஸ்மீர், எம்.எச். எம்.இஸ்மாயில், எம்.றனிஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழில், பிரதம இவிகிதர் எம்.எம்.றசீட், கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சாய்ந்தமருது சஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளர் நௌபர் ஏ.பாவா, பொருளாளர் எம்.நாசர், தெரிவுக்குழு தவிசாளர் எம்.எச்.ஏ.காலிதீன் உள்ளிட்ட கல்வியாளர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், சாய்ந்தமருது விளையாட்டு கழக சம்மேளன பிரதிநிதிகள என பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment