சட்டவிரோத கருத்தடை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சகாப்தீன் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நீதியமைச்சர் அலிசப்ரி ஆத்திரமடைந்து ஆவசத்துடன் பதிலளித்திருக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, மருத்துவர் ஷாபியின் வழக்கு குறித்து முன்னிலையாகும் சட்டத்தரணி தொடர்பான தகவல்களை வழங்கும்படி கேள்வி எழுப்பினார்.
இதற்கு நேரடியாக பதிலளிக்காமல் நீதியமைச்சில் அந்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.
இதன்போது பதிலில் திருப்தியடையாத சமிந்த விஜேசிறி எம்.பி, அமைச்சர் அலிசப்ரியின் உடை குறித்து விமர்சனம் செய்ததை அடுத்து நீதியமைச்சர் ஆவேசப்பட்டார்.
தனது ஆடை குறித்து விமர்சித்த ஐக்கிய மக்கள் சக்திக்கு உரிமை கிடையாது என்று குறிப்பிட்ட நீதியமைச்சர் அலிசப்ரி, ஐக்கிய மக்கள் சக்தி இனவாதத்தை தூண்டிவருவதாகவும் கூறியதுடன், ஆவேசப்பட்டதற்காக சபையில் மன்னிப்பும் கேட்டார்.
0 comments :
Post a Comment