ஏறாவூர் சாதிக் அகமட்-
அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமான சபரிக்கம வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏறாவூர் நகர எல்லைக்குட்பட்ட புன்னக்குடா மூன்றாம் குறுக்கு வீதி,பெண் பாடசாலை வீதி, ஓடாவியார் வீதி, பள்ளியடி வீதி, றகுமானியா புதிய வீதி,பெண் சந்தை குறுக்கு வீதி போன்ற உள்ளக வீதிகளில் 1கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நடும் ஆரம்ப நிகழ்வு
ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் I.வாஸித் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது....
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சருமான ZA.நஸீர் அகமட் கலந்து கொண்டார்.
19 ஆவது திருத்த சட்டத்திலும் பல கருத்துப் பரிமாற்றங்களும் அதற்கான மாற்றங்களைக் கோரி பல அழுத்தங்களும் பலதரப்பினரிடம் இருந்தும் வந்து கொண்டிருக்கும் வேளை 20 ஆம் திருத்த சட்டம் தொடர்பான ஏற்றுக் கொள்ளத் தக்க திட்டவட்டமான முடிவு கிடைப்பதற்கு ஜனாதிபதி அவர்களிடமும் பிரதமர் அவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் நகரசபை உறுப்பினர் SM. றியாழ்,நகரசபையின் உத்தியோகத்தர்கள், நகரசபையின் முன்னாள் தவிசாளர்களான
A.அப்துல் நாஸர், தஸ்லிம், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர் MH.கபூர் உட்பட பல பிரமுகர்களும் இந்நிகள்வில் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment