சாய்ந்தமருதில் ஒரே இடத்தில் தொடர்ந்த மற்றுமொரு விபத்து...

நூருள் ஹுதா உமர்-


ல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதி ரெட்சிலிக்கு அருகாமையில் இன்று மாலை கார் ஒன்றும் பயணிகள் பேருந்தும் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித பாரியளவிலான காயங்களும் இல்லாது பாதுகாக்கப்பட்டிருந்தும் வாகனங்கள் கடுமையாக சேதமாகியுள்ளது. தகவலையறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கல்முனை போக்குவரத்து பொலிஸார் வீதியின் போக்குவரத்தை சீர் செய்ததுடன் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதி ஒழுங்குகளை சரியாக பின்பற்றாமை, வேகமாக வாகனத்தை செலுத்துதல் போன்ற காரணங்களினால் இதே பிரதேசத்தில் இவ்வாரம் நடைபெறும் மூன்றாவது விபத்தாக இது கொள்ளப்படுவதுடன் தொடர்ந்தும் சம்பவம் நடந்த இதே இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு இளைஞர் மரணமடைந்ததுடன் மற்றுமொறு இளைஞர் இப்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :