ஒலுவில் கடல் பகுதியில் கடலரிப்பு காரணமாக பல பிரதேசங்கள் கடலில் முழ்கி வருகிறது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று (3) நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் இந்த கடலரிப்பை கட்டுப்படுத்தவும் இதற்கான தீர்வு திட்டங்கள் தொடர்பில் உரிய அமைச்சர் மற்றும் பொறுப்பதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் நபீல் அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினர் எம். அமீன், கட்சியின் முக்கியஸ்தரான ஏ.நெளஷாத் ஆசிரியர் மற்றும் ஊடகவியலாளர்களான சகோதரர் ரமீஸ் , ரியாஸ் ஆசிரியர் மற்றும் கட்சிப்பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment