மன்னாரில் கொரோனா பரவுகிறதா? சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்


ஜே.எப்.காமிலாபேகம்-

ன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட ரயில்வே பணியாளர்கள் மூவருக்கும் , கொரோனா தொற்று இல்லை என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.

கடந்த சனிக்கிழமை வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவர், தப்பியோடிய நிலையில் மன்னார் ரயில் நிலையத்தில் தலைமைறைவாகியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த நபரை பிடிப்பதற்காக உதவிய மூன்று ரயில்வே பணியாளர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நபருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ரி.வினோதன் கூறியுள்ளார்.

அத்துடன், மூடப்பட்டுள்ள மன்னார் ரயில் நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் கவனஞ் செலுத்தி வருவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :