ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையினை பொறுப்பேற்ற பட்டதாரிகள்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-


ரசாங்கத்தின் நோக்கங்களையும், எதிர்பார்ப்புக்களையும், வினைத்திறனாகவும், விளைதிறனாகவும் நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் உள்ளது என ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளை வரவேற்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (02.09.2020) நடைபெற்ற போது தலைமை உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -


பல்வேறு பட்டதாரிகள் இருக்கும் நிலையில் தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது பாரிய வரப்பிரசாதமாகும். அந்தவகையில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி நெறியில் முழுமையாக பங்கெடுக்காத சமயத்தில் உங்களுடைய நியமனத்தினை உறுதிப்படுத்தும் பட்சத்தில் பாரிய சிக்கல்கள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. எனவே இவ்வாறான விடயங்களுக்கு முகங்கொடுக்காமல் பயிற்சி நெறியினை திறம்பட மேற்கொள்வது தங்களுக்கு அவசியமாகும் என்றார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் செயற்திட்டத்திற்கு அமைவாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் பிரதேச செயலகங்கள் தோறும் தங்களது கடமைகளை பொறுப்பேற்றனர்.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட அறுபத்தொரு (61) பட்டதாரிகளில் ஐம்பத்தொன்பது (59) பட்டதாரிகள் தங்களுக்கான நியமனங்களை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் செயலக கணக்காளர் ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.றுவைத், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் ஹமீட் மற்றும் கடமையை பொறுப்பேற்ற பட்டதாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :