பிலிப்பைன்ஸ் மாலுமிக்கு கொரோனா இல்லை!கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் முரளி.






காரைதீவு நிருபர் சகா-

திருக்கோவில் சங்குமண்கண்டி கடற்பரப்பில் எரிந்துகொண்டிருந்த பனாமாக்கப்பலிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மாலுமி பொறியியலாளர் எல்மோவிற்கு கொரோனாத் தொற்று இல்லையென மருத்துவஅறிக்கை கிடைத்துள்ளதாக கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் குறித்த பிலிப்பைன்ஸ் மாலுமி அனுமதிக்கப்பட்டதும் வெறிநாட்டுப்பிரஜை என்பதால் கொரோனாப் பரசோதனைக்காக இரத்த மாதிரி எடுக்கப்பட்டது.

அம்மாதிரியை சோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
அந்தப்பரிசோதனையின் அறிக்கை நேற்று(4) வெள்ளிக்கிழமை மாலை 'நெகட்டிவ்' என கிடைக்கப்பெற்றுள்ளது.

மேற்கொண்டு அவரை அதிதீவிர சிகிச்சைப்பிரிவின் தனிமைப்படுத்தல்பிரிவிலிருந்து விடுவித்து சாதாரண பிரிவில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கப்பல் கம்பனி சார்பில் நேற்று(4) மாலை திருமலையிலிருந்து பிரதிநிதியொருவர் வைத்தியசாலைக்கு விஜயம்செய்து மாலுமியின் உடல்நிலைபற்றி அறிக்கை எடுத்ததுடன் அவரை கொழும்பு தேசியவைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல அனுமதி கேட்டார்.

உள்நாட்டு வைத்தியநடைமுறையின்படி வெளிநாட்டுப்பிரஜை அதுவும் இவ்விதம் பாதிகக்கப்பட்ட ஒருவரை உடனடியாக தற்போதைய உடல்நிலையில் கொண்டுசெல்ல அனுமதிக்கமுடியாது என்றும் அவ்வாறெனின் இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவராலயத்தில் முறைப்படி அனுமதிபெற்றுவந்தால் பின்னர் அனுமதி வழங்கலாமென வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன் கூறியுள்ளார்.
அதனையடுத்து மேலதிக நடவடிக்கைக்காக அவர் கொழும்பு சென்றுள்ளதாகத்தெரிகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :