யானை பிரச்சினை, கடலரிப்பு, மண்மலை விவகாரம் தொடர்பில் ஹரீஸ் உரை ; தீர்வுகள் கிட்டும் என நம்பிக்கையும் வெளியிட்டார்.



அபு ஹின்ஸா-
லுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் அப்பிரதேசங்களில் கடலரிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் ஒலுவில் பிரதேசத்தில் இன்று மிகப்பெரும் அனர்த்தம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் கூட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக எல்லை சுவர்களை உடைத்துக்கொண்டு கடல்நீர் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்துள்ளது. இதுசம்பந்தமாக கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் பேசி இப்போது சிறியளவிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகள் போதுமானதாக அமையவில்லை என்று நாங்கள் கருதுகின்றோம். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் இன்று (10) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், அக்கடலரிப்பு பாரதூரமான நிலையில் இருக்கின்றது. அவற்றை கட்டுப்படுத்த தடுப்பு அணை அமைப்பது சம்மந்தமாக தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களும் வேண்டி நிற்கிறார்கள்.
அது மாத்திரமின்றி அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இப்போது வேளாண்மை அறுவடை செய்திருக்கின்ற நிலையில் நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் அம்பாறை மாவட்ட கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றது. அந்த காட்டு யானைகளினால் மக்களுக்கு பாரியளவிலான தொல்லை நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை தொகுதியில் அமைந்துள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களை கொண்ட குடியிருப்பு பகுதியில் இரவு வேளைகளில் காட்டு யானைகள் புகுந்து சிறுவர்களையும் அங்குவாழும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இது தொடர்பில் குறித்த அமைச்சின் அமைச்சர் சி.வி. ரத்நாயக்க அவர்களை சந்தித்து தடுப்புவேலி அமைப்பது தொடர்பாக வேண்டியிருந்தேன். அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். அதற்கு நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன். அத்துடன் பொத்துவில் மண்மலை விவகாரம் அந்த மக்கள் மத்தியில் மிகப்பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக தொல்பொருள் செயலணிக்குழு நியாயமாக நடக்க வேண்டும். என்பதுடன் மக்களின் ஆலோசனைகளை பெற்று அப்பிரதேசத்தில் வாழும் மக்களின் குடியிருப்புகளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாமல் தீர்மானங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :