ஜே.எப்.காமிலா பேகம்-
20ஆவது திருத்தச் சட்டம் இன்று மாலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அல்லது உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு இருந்த தடை இந்த திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மற்றும் அழைப்பதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதி வசம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 20ஆவது திருத்தத்தில் உள்ள குறிப்பிட்ட சில அம்சங்கள் கிழே தரப்படுகின்றன.
*ஜனாதிபதி, காலத்துக்குக் காலம், பிரகடனத்தின் மூலம் நாடாளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கலாம், அமர்வை நிறுத்தலாம், அத்துடன் கலைக்கலாம்
ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீண்டும் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.
*அரசியலமைப்புச் சபையில் சிவில் உறுப்பினர்களுக்கு கதவடைப்பு
கணக்காய்வு ஆணைக்குழு நீக்கி மீண்டும் கணக்காய்வாளர் பதவி
சம்பிரதாய ஆணைக்குழுக்கள் உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கமுடியாது.
*பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம்
*அமைச்சரவை எண்ணிக்கை வரையறை நீக்கம்.
*இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் எண்ணிக்கை வரையறையும் நீக்கம்.
*புதிய நாடாளுமன்றம் நியமிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின் ஜனாதிபதியினால் கலைக்க முடியும்.
*அவசர சட்டம் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வாய்ப்பு
*ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான குறைந்த வயதெல்லை 30ஆக தெரிவு.
*உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் பதில் நியமனங்களை ஜனாதிபதியினால் வழங்கமுடியும்.
*நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம்.
*பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைப்பு.
*இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற திருத்தம் நீக்கம்.
0 comments :
Post a Comment