பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் நரயங்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு பள்ளிவாயல் உள்ளது. இந்த பள்ளியில் நேற்று (04) வெள்ளிக்கிழமை வழக்கம் போல மதவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.
வழிபாட்டு நிகழ்ச்சியின் போது பள்ளியின் ஜன்னல், கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த பள்ளியின் அமைக்கப்பட்டிருந்த ஏ.சி.களுக்கு (ஏர் கண்டிஷனர்) செல்லும் கேஸ் குழாயில் வாயு கசிவு ஏற்பட்டது.
இந்த கேஸ் கசிவு காரணமாக ஏ.சி.கள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால்பள்ளியில் தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து காரணமாக 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் டாக்காவில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 21 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment