புனரமைக்கப்பட்டு மேலும் அழகூட்டப்பட்ட வாவிக்கரை செய்னுல் ஆப்தீன் ஆலிம் பூங்கா மீள்கையளிப்பும், பாராளுமன்ற உறுப்பினர் ZA.நஸீர் அகமட் அவர்களின் சிறப்புரையும்


எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
கொரோனாதொற்று காரணமாக கடந்த சில மாதகாலங்களாக மூடப்பட்டிருந்த ஏறாவூர் வாவிக்கரையோர செய்னுல் ஆப்தீன் ஆலிம் பூங்காவின் பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு நகரசபையின் கௌரவ தவிசாளர் I.வாஸித் தலைமையில் நேற்று 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30PM மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ZA.நஸீர்அகமட் கலந்து கொண்டதோடு அதிதிகளாக நகரசபையின் கௌரவ உறுப்பினர் SM.றியாழ் மற்றும் சபையின் செயலாளர் சியாவுல்ஹக் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிபடத்தக்கது.
நிகழ்வினை தொடர்ந்து தற்கால அரசியல் சூழ்நிலையும் முஸ்லிம்களின் பங்களிப்பும் பற்றிய விசேட சிறப்புரை ஒன்றை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றியதோடு
எதிர் வரும் காலங்களில் வாவிக்கரையோர பூங்காக்கள் அழகுபடுத்தல் திட்டத்தில் மேலும் மேம்படுத்தப்படும் என்பதை தனது உரையில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :