கொரோனாதொற்று காரணமாக கடந்த சில மாதகாலங்களாக மூடப்பட்டிருந்த ஏறாவூர் வாவிக்கரையோர செய்னுல் ஆப்தீன் ஆலிம் பூங்காவின் பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு நகரசபையின் கௌரவ தவிசாளர் I.வாஸித் தலைமையில் இன்று 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30PM மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட உள்ளது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ZA.நஸீர்அகமட் கலந்து கொள்வதோடு அதிதிகளாக நகரசபையின் கௌரவ பிரதித் தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் சபையின் செயலாளர் என அனைவரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
தொடர்ந்து தற்கால அரசியல் சூழ்நிலையும் முஸ்லிம்களின் பங்களிப்பும் பற்றிய விசேட வரலாற்று சிறப்புரை ஒன்றை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்ற உள்ளார்....
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றேன்.
0 comments :
Post a Comment