காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித்தொடர்பாளர்களில் ராஜீவ் தியாகியும் ஒருவர். இவர் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளராகவும், செய்தித்தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இவர் இன்று மாலை 5 மணியளவில் ஹிந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் வைஷாலியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற ராஜீவ் தியாகிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி ராஜீவ் தியாகி உயிரிழந்தார்.
கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணமடைந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட பலரும் ராஜீவ் தியாகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment