மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் கிராமத்தில் இதேபோன்றதொரு நாளில் (கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி) நிராயுதபானிகளாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அப்பாவி மக்கள் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மிளேச்சத்தனமான தாக்குதலால் சுமார் 126 பேர் வபாத்தான அந்த வரலாற்றுத் துரோகம் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அசசம்பவம் முழு முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் மறக்க முடியாத துரோக வடுக்கலாவே பதிவாகியுள்ளது.
ஏந்தவித பாதுகாப்பும் இன்றி உறங்கிக் கொண்டிருந்த ஏறாவூர் கிராமத்திற்குள் ஆயுதங்களுடனும், கத்திகளுடனும் நுழைந்த பாசிச விடுதலைப் புலிகள் அவர்ககளின் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், கற்பிணிகள் என்ற பால் வேறுபாடின்றி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் கொத்தியும் மேற்கொண்ட படுபாதகச் செயலால் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகாயமடைந்ததுடன் அதில் சுமார் 126 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுபாதக கொலைச் செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களாலும் வரலாற்றில் மறக்க முடியாத வடுக்கள் நிறைந்த கரிநாளாகும்.
தமது சுயநல நோக்கத்திற்காக எந்தவித பாவமும் அறியாத இந்த மக்கள் மீது மேற்கொண்ட சம்பவங்கள்போல் எல்.ரி.ரி.யினர் 1990ஆம் ஆண்டே ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காத்தாங்குடியில் இரண்டு பள்ளிவாசல்களில் இறைவனை துதி செய்து கொண்டிருந்த அப்பாவிகள் மீது மின்சாரத்தை அணைத்து மேற்கொண்ட துரோகத்தனமான தாக்குதலால் சுமார் 103 பேர் ஸ்தலத்திலேயே மரணமானதுடன் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்த சம்பவம், 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் உடுத்திய ஆடைகளுடன் சகலவற்றையும் சூறையாடிவிட்டு துரத்தியமை போன்ற பல ஆயிரக்கணக்கான சம்பவங்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டுள்ள நிலையில் அந்த வரலாற்றுத் துரோகத்திற்கு இலக்கான மக்கள் இன்று வரை உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசியல், பொருளாதார ரீதியாகவும் பாரியளவில் பாதிப்புக்ளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த மக்களின் விடயங்களில் பல அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துபோன நிலையிலும் இவர்கள் விடயத்தில் கிஞ்சித்தும் கவனம் செலுத்தாது இந்த மக்கள் விடயத்தல் பாராமுகமாகவே இருந்து வந்துள்ளனர்.
முக்கியமாக அப்பாவிகள் மீது இவ்வாறான வராலற்றுத் துரோகங்களை மேற்கொண்ட பலர் இன்றும் சுதந்திராமாக திரிவதுடன் பலர் அரசியல் விடயங்களில்கூட ஈடுபட்டு தாம் குற்றமிழைக்காதவர்கள்போல் ஜாம்பவான்களாக வலம் வந்து கொண்டிருப்பதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களை வாட்டி வதைக்கின்றது.
இன்று நடைபெறும் சிறிய சிறிய விடயங்களுக்கு எல்லாம் கைதுகளும், நீதிமன்ற விசாரைணகளும், குற்றப்புலணாய்வுத் துறையினரின் விசாரணைகளும் ஒன்றுக்கு பல முறை அடுக்கடுக்கா இடம் பெற்று வரும் நிலையில் ஒரு சமுகமே ஒட்டு மொத்தத்தில் பாதிக்கப்பட்டு தமது தாய்களையும், தந்தையர்களையும், கணவன்களையும், மணைவிகளையும், பிள்ளைகளையும் இழந்துள்ள இந்த மக்களின் நீதி, நியாய விடயங்களில் யாருமே இன்றுவரை கவனம் செலுத்தாது பாராமுகம் காட்டுவது பாரிய துரோகத்தனமான செயற்பாடுகள் என்று கூறுவதைவிட வேறில்லை.
வடகிழக்கில் விடுதலைப் புலிகளாலும் ஏனைய சக தீவிரவாத இயக்கங்களாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிகளின் விடயங்களை இந்த அரசாங்கமாவது கவனத்தில் எடுத்து அதற்கான நீதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். குறித்த குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்களும், அதில் நேரடியாக பங்கு கொண்டவர்களில் பலர் இன்றும் உள்ளனர். தற்போதுள்ளவர்களையாவது கைது செய்து அவர்களுக்கு கடுமையான மரண தண்டனை வழங்கி நீதியையும், நியாயத்தையும் வழங்குவதுடன் உயிரழிப்பு, உடமை இழப்புக்களுக்கு பூரணமான இழப்பீடுகளை வழங்குவதுடன் கடந்த 30 வருடங்களாக அகதிகளாக இருக்கும் மக்களை பூரண வசதிகளுடன் மீள் குடியேற்ற வேண்டும் எனவும் முஸ்லிம் சமுகம் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தினை நாடி நிற்கின்றது.
0 comments :
Post a Comment