சேருவில கண்டி பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கிறனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கிறனர்.
விபத்தில் அக்போபுர பகுதியைச் சேர்ந்த நாலக்க வயது 39 என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்துடன் சேருவில பகுதிக்குச் சென்ற வேன் மோதுண்டதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment