கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக தவிசாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக லீவுபெற்றிருந்த நாவிதன்வெளிப்பிரதேசபைத்தவிசாளர் தவராசா கலையரசன் நேற்றுமுன்தினம் திங்களன்று(10) சபைக்குச் சென்று தவிசாளர் பதவியை மீண்டும் பெற்றுள்ளார். விரைவில் உள்ளூராட்சிமன்ற சட்டதிட்டங்களுக்கமைவாக தனத தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்வார் எனத் தெரிகிறது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சர்ச்சைக்கு மத்தியில் நியமிக்கப்பட்ட நாவிதன்வெளிபிரதேசசபைத் தவிசாளர் கலையரசனின் பெயர் நேற்றிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
தேர்தலுக்கு பின்னர் நேற்றுமுன்தினம்(10) திங்கட்கிழமை அவர் பிரதேசசபைக்குச் சென்று தற்காலிகமாக லீவுபெற்றிருந்த தவிசாளர் பதவியை மீண்டும் ஒப்பமிட்டுப்பெற்றுக்கொண்டார்.
அங்கு சென்ற கலையரசனுக்கு பிரதேசசபை ஊழியர்கள் மாலைசூட்டி பெருவரவேற்பளித்தனர். பதில் தவிசாளராக விருந்த ஏ.சமட் செயலாளர் எ.றஹீம் உள்ளிட்ட குழுவினர் அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து ஊழியர்களுடன் பாராட்டுவைபவமொன்றும் நடாத்தப்பட்டது.
தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயிக்கப்பட்டதும் நேற்றும்(11) சபைக்குச் சென்ற த.கலையரசன் தனது பதவியை இராஜினாமாச்செய்வதற்கான உரிய ஆவணங்களை ஏற்பாடு செய்தார்.
அவரது ஆதரவாளர்கள் அங்கு சென்று வாழ்த்துத்தெரிவித்தவண்ணமுள்ளனர். எதிர்வரும் 20ஆம் திகதி அவர் பாராளுமன்றல் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் எனத் தெரிகிறது.
0 comments :
Post a Comment