இலங்கை தாய் நாட்டின் முதுகெலும்பான நீதித்துறைக்கு அமைச்சரவை அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசினால் முஸ்லீம் சட்ட வல்லுநர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இது முஸ்லீம் சமூகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் கௌரவமுமாகும் என முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அரசின் அமைச்சரவை நியமனம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசு இனவாத போக்குடன் செயல்படுவதாக எதிர்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் பல்பக்க தாக்குதல்ககளையும் கடந்த தேர்தல் காலத்தில் எதிர்கொண்டது. அவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் முஸ்லீம் சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற பதவியும் வழங்கி அமைச்சரவை அமைச்சு அந்தஸ்தும் வழங்கியுள்ளமை குறித்து பலரும் இன்று வாயடைத்து நிற்கின்றனர்.
சிறிய கட்சிகளுக்கு வாக்குப்போட்டு எந்த பயனும் இல்லை என்பதையும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் முஸ்லீம் சமூகம் இணைந்து பயணிக்கும் போது நிம்மதியான வாழ்வை எதிர்காலத்தில் அனுபவிக்கும் என்பதனை இன்றய அமைச்சரவை நியமனம் துலாம்பரமாக எடுத்துக்காட்டியுள்ளது. இதனையே கடந்த தேர்தலில் மக்களுக்கு வலியுறுத்த்தினோம். சிறிய கட்சிகளுக்கு பின்னால் செல்ல வேண்டாம் என கூறினோம். ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. உண்மைகளை பேசி அரசியல் செய்யும்போது மக்கள் நிராகரிக்கின்றனர், பின்னர் ஏமாற்றங்களை சந்திக்கின்றனர்.
இனியும் சிறிய கட்சிகளின் பின்னால் அலைந்து தெரியாமல் நேரடியாக பொது பெரமுன அரசோடு இணைந்து உங்களுக்கான பிரதிநிதிகளை எதிர்காலத்தில் தெரிவு செய்ய மக்கள் ஒன்றுபட வேண்டும். அதனூடாக இனவாதம் பிரதேசவாதமற்ற நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் இணைந்து செயல்படுவோம்.
0 comments :
Post a Comment