மாத வாடகைக்கான செலவீனங்களை குறைக்கும் வண்ணம் கிராமிய கைத்தொழில் அமைச்சின் கட்டிடத்தை மாற்றுவதற்கு விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரான பிரசன்ன ரனவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாத வாடகையாக 80 இலட்சம் ரூபா செலவிடப்பட்டு கொழும்பு அமைந்துள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் கிராமிய கைத்தொழில் அமைச்சு இயங்கிவந்தது.
இந்த நிலையில், வாடகைக்காக அதிக பணம் செலவிடுவதை நிறுத்தும் வகையில், குறித்த அமைச்சின் செயற்பாடுகளை பத்தரமுல்லையில் உள்ள “அபே கம” பகுதிக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உள்ள இந்த அமைச்சு சாதாரண கிராம மக்கள் வந்து செல்ல முடியாத இடத்தில் செயற்ப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் இதனன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கிராமிய கைத்தொழில் அமைச்சின் அலுவலகமானது உலக வர்த்தக மையதத்தின் கிழக்கு கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலும், அமைச்சின் ஊழியர்களின் செயற்பாடுகள் மேற்கு கட்டிடத்தின் 6 ஆவது மாடியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இரண்டு தொகுதிகளுக்குமாக மொத்தமாக 80 இலட்சம் ரூபா மாத வாடகையாக செலவிடப்பட்டுள்ளது.
ஆகவே தான் மக்களின் பணத்தை வீணாக செலவிட போவதில்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் அனுமதி அளிக்க போவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரனவீர குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment