துறைமுகத்தில் நுழைந்த விமல்,கம்மன்பிலவுக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு!

ஜே.எப்.காமிலா பேகம்-

மைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்புத் துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களை, சந்திக்கச் சென்றபோது கடுமையான கூச்சல் மற்றும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவதற்கு, அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து இப்போராட்டம் நடத்தப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு குறித்த அரச பிரதிநிதிகள் அவ்விடத்திற்கு சென்று சமரசப் பேச்சு நடத்த முயற்சித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துறைமுக ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பினை தங்களது கூச்சல் குரலில் வெளியிட்டுள்ளனர்.

நிலைமையை புரிந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :