யாழில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட யுவதி! -நடந்தது என்ன?

நீ
ர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதியை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று மாலை யுவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர் யுவதிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த வேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.

அத்துடன் தாம் வெள்ளை வானில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும் இளைஞனும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :