ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் ருவான் விஜேவர்த்தன ஆகியோரை பொலிஸில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி ருவான் விஜேவர்த்தனவை, ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி, ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரையும் இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment