இதில் சிறப்புப் போச்சாளர்களாக கலாநிதி விஜய ஜயதிலக்க இயக்குனர் வறுமை ஒழிப்பு நிலையம், இலங்கை, கலாநிதி மு விஜயா துணைப்பேராசிரியர், துறைத்தலைவர் வரலாற்றியல்துறை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, சென்னை, கலாநிதி றமீஸ் அபூபக்கர், பீடாதிபதி, கலை கலாச்சார பீடம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், சட்டத்தரணி எம்.சி.எம். நவாஸ், வைத்தியர் TSRTR..றஜப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஜனாபா எம்.எம்.மஸ்றூபா இயக்குனர், பால்நிலை சமநிலை மற்றும் சமத்துவ நிலையம் (Centre for Gender Equity & Equality -CGEE) மற்றும் கலாநிதி அனுசியா சேனாதிராஜா, துறைத்தலைவர், சமூக விஞ்ஞானம்,; தென்கிழக்கு பல்கலைக்கழகம், முன்னாள் இயக்குனர் பால்நிலை சமநிலை மற்றும் சமத்துவ நிலையம் (CGEE ) அவர்களும் நெறிப்படுத்தி நடத்தினர். பொறி. அஸ்லம் சாஜித் (வலையமைப்பு முகைமையாளர்);, உதவி நூலகர் இரங்க பன்டார ஆகியோர் தொழிநூட்ப உதவிகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வினை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமநிலை மற்றும் சமத்துவ நிலையத்தின் இயக்குனர் ஜனாபா எம்.எம். மஸ்றுபா அவர்கள் குறித்த கருத்தரங்கின் கருப்பொருள் பற்றிய பொதுவான விளக்கத்தினனக்கொடுத்து சிறப்புப் பேச்சாளர்களையும் அறிமுகப்படுத்தி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முதல் அங்கமாக கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்கள் 'பால்நிலை சமத்துவத்தின் சமூகவியல் நோக்கு' எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் பல்கலைக்கழகங்களில் நடை பெறுகின்ற பகிடி வதை தொடர்பான சவால்களையும் இதன் மூலம் மாணவ சமூதாயத்திற்கு ஏற்படுகின்ற இழப்புகள் தொடர்பாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் இவை சம்மந்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள்,; கொள்கைகள்,; கட்டமைப்புக்கள் போன்றவற்றையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.
கலாநிதி விஜய ஜயதிலக்க, வறுமை ஒழிப்பு பொருளாதார அபிவிருத்தியில் பால்நிலை முதன்மைப்படுத்தலிலுள்ள சவால்கள் இலங்கையின் தற்போதைய நிலை, மற்றும் இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சில உதவித் திட்டங்கள் பற்றியும், உலகளாவிய மட்டத்தில் பால்நிலை முதன்மைப்படுத்தலை மேம்படுத்துவதற்கான தந்திரோபாயங்களையும், சிறப்பாக விளக்கினர்.; அதனைத் தொடர்ந்து காலாநிதி மு.விஐயா அவர்கள் பால்நிலை முதன்மைப்படுத்தலில் தெற்காசிய நாடுகளில் காணப்படுகின்ற சமய, சமூக, கலாச்சாரம் சார்ந்த விடயங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்ததுடன் சமூகக்கட்டமைப்பு, மற்றும் சமூக நியதிகள்ஃ சமூக கட்டுப்பாடுகள்; (Social stigma) போன்றவை எவ்வாறு பால்நிலை முதன்மைப்படுத்தலில் சவாலாக உள்ளன என்றும் விளக்கினார்.
அடுத்ததாக சட்டத்தரணி M.C.M. நவாஸ் அவர்கள் பால்நிலை முதன்மைப்படுத்தலில் சர்வதேச ரீதியாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற சட்டங்கள் மற்றும் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் பால்நிலை பாகுபாடற்ற சமத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதையும், மற்றும் வன்முறைகள் தொடர்பான சட்டங்களை; பற்றியும் மிகத்தெளிவாக விளக்கினார்.; இலங்கைச்சட்டங்களில் பால்நிலை முதன்மைப்படுத்தலில் மிகக்குறைந்தளவுதான் சவால்கள் உள்ளதாகவும், இவை சம்மந்தமான விழிப்புணர்வுகள் பொது மக்களிடம் குறைவாக இருப்பதாகவும், பொது மக்களுக்கு கல்வியூட்டப்படவும், வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
வைத்தியர்.றஜப் அவர்கள் பால்நிலையை சமூகம் மற்றும் உயிரியல்; ரீதியாக எவ்வாறு நோக்கப்பட வேண்டும் என்றும் பெண்களது உளவியல்,உடலியல் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் நோய்கள் தொடர்பான கருத்துக்களையும் நீண்டு நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்கினை (Sustainable Development Goal No:5) அடைவதில் உள்ள சவால்கள்; பற்றியும் தெளிவாக விளக்கினார்.
இறுதியில் பங்குபற்றியவர்களின் வினாக்களுக்கும் விடை அளிக்கப்பட்டன.
கலாநிதி அனுசியா சேனாதிராஜா, முடிவுரையையும் நன்றியுரையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கை, இந்தியா, பிலிப்பைன், பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த 444 பேர் பங்குபற்றினர். அவர்களுக்கான இலத்திரனியல் சான்றிதழும் உடணடியாக வழக்கப்பட்டது.
பங்கு பற்றியவர்களின் பின்னூட்டல்கள் மிகத்திருப்திகரமாக அமைந்திருந்ததுடன் மீண்டும் இவ்வாறான கருத்தரங்குகளை எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.