நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 57 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அவர்களில் 43 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிலும், 14 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக கடமையாற்றிய ராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், அவரின் பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனைகளின் மூலம் உறுதியாளியுள்ளது.
11 வயது மற்றும் ஒன்றரை வயது பிள்ளைகளுக்கே இவ்வாறாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் 11 வயது பிள்ளைகளின் வகுப்பை சேர்ந்த 70 மாணவர்கள் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
11 வயது பிள்ளை கடந்த 4 , 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சென்றிருந்த நிலையிலேயே அவரின் வகுப்பை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த அதிகாரி அனுராதபுரத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கடந்த 3 ஆம் திகதி ராஜங்கனை பிரதேசத்தில் மரண சடங்கொன்றில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மரண சடங்குகளில் கலந்து கொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் , ராஜங்கனைப் பகுதியைச் சேர்ந்த நால்வருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதா இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் செயற்படுவது அவசியமாகும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா ஆபத்து இன்னும் குறைவடையவில்லை எனவும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் வெளிப்படுத்திய அக்கறை தற்போது குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து, 980 ஆக காணப்படுகின்றது.
அத்துடன், 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 520 பேர் வைதியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதுரை கொரோனா தொற்றினால் 11பேர் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.
உங்கள் விளம்பரங்களும் இங்கே இடம்பெற அழையுங்கள். 077 61 444 61 / 075 07 07 760 |