அம்பாறையில் பொலிஸ் இராணுவம் விசேட அதிரடிப்படையினரின் தபால் மூல வாக்களிப்பு


பாறுக் ஷிஹான்-
நாடு பூராகவும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு விசேட அதிரடிப்படை இராணுவம் பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு காலை மணி முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

வியாழக்கிழமை(16) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலையம், சம்மாந்துறை பொலிஸ் நிலையம், சவளக்கடை பொலிஸ் நிலையம் ,மத்திய முகாம் பொலிஸ் நிலையம், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை மற்றும் கல்முனை இராணுவ மகாம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவதுடன் 7920 க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் பொலிஸ், முப்படை சிவில் பாதுகாப்பு படை உட்பட சுகாதார துறையினர் எதிர்வரும் 16,17 ஆந்திகதிகளில் நள்ளிரவு 12.00 மணிவரை வாக்களிக்க முடியுமெனவும், இத்தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தாம் சேவைபுரியும் நிலையம் அமைந்தள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



--
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -