கந்தளாயில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை .


எப்.முபாரக் -
ந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு(26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

76/1,பேராறு,கந்தளாய் பகுதியைச் 36 வயதுடைய ஏ.றுமைஸ் என்பவரே இவ்வாறு வீட்டுக்குள் கயிற்றினை கட்டி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில் மன நோய்க்குட்பட்டு இருந்த நிலையிலே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டு அறைக்குள் சென்று கயிற்றினால் கட்டி தூங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்,ஆரம்ப கட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -