நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சிகரம் மாற்றுத்திறனாளிகள் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தௌபீக் தலைமையில் சீ.பீ.எம். நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு வை.எம்.சீ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இதில், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு தாங்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியதோடு அதற்கான தீர்வுகளையும் பெற்றுத் தருமாறு நிறுவன உத்தியோகத்தர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறித்த சந்திப்பில் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களான கே. கிரிஸ்ரி சந்திரகாந், ஐ. கலைவேந்தன், எஸ்.சுவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.