உங்களுக்கு வெற்றி நிச்சம் - பாரத்துக்கு ஜனாதிபதி உறுதி


க.கிஷாந்தன்-
ண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமியின் தலைமையில் இடம்பெற்ற ஜனாதிபதியின் வருகை நிகழ்வில் அலைகடலென திரண்ட கண்டி வாழ் தமிழ் பேசு மக்களைக் கண்டு நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என பாரத் அருள்சாமிக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அரசாங்கத்தின் சார்பில் களமிறங்கியுள்ள ஒரே ஒரு தமிழ் வேட்பாளரான பாரத் அருள்சாமியின் வெற்றியை உறுதிபடுத்தும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (11.07.2020) கண்டி, கலஹா குரூப் மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டார்.

ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் சார்பில் கண்டி வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியுள்ளதால் அவருடைய வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கண்டி வாழ் தமிழ் பேசும் மக்களும் நேற்றைய கூட்டத்தில் அலைகடலென திரண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்,
பாரத் அருள்சாமியுடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அவருக்கு மக்களின் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளம், இணையத்தளம், மக்களின் நேரடி கருத்துக்களின் ஊடாக பெற்றுக் கொண்ட கண்டி வாழ் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றையும் பாரத் அருள்சாமி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தார்.
அறிக்கையை பெற்றுக் கொண்ட அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நீங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவீர்கள் என பாரத் அருள்சாமிக்கு உறுதியளித்த அவர், தேர்தலில் வெற்றிப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நீங்கள் உங்களுடைய மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவருக்கு வலியுயுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -