நடைபெறவுள்ள 2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பல கட்சிகளும் பலமுனைப் போட்டிகளில் குதித்திருக்கும் இவ்வேளை மக்கள் செல்வாக்குள்ள சமூக சேவை அமைப்பான நாபீர் பெளண்டேஷன் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை அக்கட்சிக்கு பாரிய வெற்றியாகும்.
கடந்த உள்ளூராட்சி மன்ற வட்டாரத் தேர்தலில் நாபிர் பெளண்டேஷன் ஆதரித்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதுடன் அதனைத் தொடர்ந்து நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர் பொறியியலாளர் நாபீர் அவர்களை இம்முறை தேர்தலில் போட்டியிடுமாறு பலரும் கேட்டுக்கொண்டதனால் களமிறங்க இருந்த நிலையிலேயே கொரோனா வந்தமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வெளிநாடு சென்றவர் நாடு திரும்புவதில்ல் தாமதம் ஏற்பட்டுவிட்டது.
அதன் காரணமாக போட்டிய்யிடுவதை நிறுத்திக் கொண்டார் அதனால் நடைபெறவுள்ள தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் அதிக முஸ்லீம் உறுப்பினர்களை பெற வேண்டும் என்ற நோக்கில் நாபீர் பெளண்டேசனின் உறுப்பினர்களை தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அதன் ஸ்தாபகர் பிரபல தொழிலதிபர் பொறியியலாளர் உமான் கண்டு நாபிர் கேட்டுள்ளமை பெரும் வெற்றியாகும் என்று கட்சி ஆதரவாளர்கள் சந்தோசம் கொள்கின்றனர்.
அத்துடன் அடுத்து வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் பொறியியலாளர் நாபீர் போட்டியிடும் வாய்ப்பும் உள்ளது என்பதனால் இம்முறை நாபீர் பெளண்டேசனின் பலத்த ஆதரவினை முஸ்லீம் கட்சிக்கு தெரிவித்து சம்மாந்துரை தொகுதியில் மன்சூரை வெற்றி வெற வைப்பது மாத்திரம் அல்லாமல் அம்பாரை மாவட்டத்தில் கட்சியை மொத்தமாக முன்னிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதுமாத்திரமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாபிர் பெளண்டேசனுக்கு அதிக மக்கள் செல்வாக்கு உள்ளதனால் அங்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மரச்சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீருக்கு தங்கள் ஆதரவை வழங்க நாபிர் பெளண்டேசன் உறுப்பினர்களை ஸ்தாபகர் நாபிர் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..