நூருல் ஹுதா உமர் -
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றை நேற்று (13) திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தார்.
அவ்விஜயத்தின் போது அம்பாறை மாவட்ட திண்மைக்கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குற்பட்ட அஷ்ரப் நகரில் உள்ள திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தை திறந்து வைத்ததுடன் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைகழகத்திற்க்கு விஜயம் செய்து பல்கலைக்கழக உபவேந்தருடன் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்தும் ஒலுவில் துறைமுகத்திற்கும் சமூகமளித்த அவர் நிலவரங்களை கேட்டறிந்ததுடன் துறைமுகத்தையும் பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின் போது ஆளுனருடன் , கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகள், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகள் என பலரும் இணைந்திருந்தனர்.
இவ்விஜயத்தின் போது ஆளுனருடன் , கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகள், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகள் என பலரும் இணைந்திருந்தனர்.