பெண்கள் விடுதிக்குள் வைத்தியர் வேடத்தில் நுழைந்த இளைஞன் கைது!

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் பெண்கள் விடுதிக்கு வைத்தியர் போன்று தன்னை அடையாளப்படுத்தி வந்த நபர் ஒருவர், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திஹாரி, தர்கா மாவத்தையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து இதயத் துடிப்புமானி - 01, போலி இறப்பர் முத்திரை - 01, சிரின்ஜர் - 01, சேலைன் குழாய் - 01, ஈ.சி.ஜி. ரோல் 05, மடிக்கணினி 01, தொலைபேசி 01, மோட்டார் சைக்கிள் 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை, அத்தனகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -