இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் சவுதி அரேபியாவில் ஹஜ் கடமைகள் ஆரம்பமாகியுள்ளன.
வருடாந்தம் சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் நிலையில், இம்முறை கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டில் வாழும் 10,000 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பேருந்துகளில், குறித்த நபர் தொடர்ச்சியாக ஒரே ஆசனத்திலேயே அமர்வதோடு ஒவ்வொரு 50 பேர் கொண்ட குழுவுக்கும் சுகாதாரப் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிறு குழுக்களாகவே “தவாப்“ செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment