ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நாங்கள் எதைச் சொல்கிறோமோ அதைச் செய்வோம்.தொண்டமான் அவர்கள் சொன்னதுபோல் 1000 ரூபா சம்பளஉயர்வு கிடைக்கும், தோட்டங்கள் கிராமம் ஆகும், படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவோம், மலையகத்தில் பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும்.அதற்கு எல்லாம் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். மொட்டு சின்னத்தில் வாக்களியுங்கள்.எங்களுக்கு வாக்களியுங்கள் என .இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிதிச்; வேட்பாளருமான எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு பின்னர் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாங்கள் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறோம்.இப்பகுதியில் இருந்து நாங்கள் மூன்று பேர் தேர்தலில் போட்டியிடுகிறோம்.ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இருக்கும் போது உங்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தார்.அதேபோல் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களிக்கச் சொல்லி கேட்டோம்.சில பேர் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் வேறுயாருக்கோ வாக்களிக்க சொன்னார்கள்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் 15 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அதேபோல் நாம் வாக்களிக்காத போதும் கூட தொண்டமான் அவர்களும் காங்கிரஸ் அவர்களின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மிகவும் பங்காற்றினார்.நீங்கள் ஜனாதிபதி அவர்களும் தொண்டமான் அவர்களும் 1000 சம்பள உயர்வு தருவதாக சொன்னார்கள.; அதை எதிர்பார்க்கிறீர்கள்.ஆயிரம் ரூபா தருவதற்கு கம்பனிகளும் தயார் நாங்களும் தயார் ஆனால் அவர்கள் மேலதிகமாக இரண்டு கிலோ தேயிலை கேட்கிறார்கள்.
அதனால் தான் நாங்கள் இன்னும் ஒப்பந்தம் செய்யாமல் இருக்கிறோம்.உங்களுக்கு தெரியும் இரண்டு மாதங்களுக்கு முன் 100 ரூபா பெற்றுக்கொடுப்பதற்காக 88000 ரூபா இல்லாமல் போனது.அந்தத்தவறை செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தயாராக இல்லை.தேர்தல் வந்தபோதும் இன்று உள்ள ஒப்பந்தப்படியே எவ்வித நிபந்தனையும் இல்லாமல் 1000 ரூபா பெற்றுக்கொடுக்க வேலைத்திட்டங்களை செய்கிறோம.; அதனால் தான் காலதாமதம் ஆகின்றது.
நேற்று முன்தினம் அட்டனில் நடைபெற்ற கூட்டத்தில் சொன்னார்களாம் இனி 1000 ரூபா சம்பளம் எல்லாம் இல்லை இனி உங்களை சிறுதோட்ட முதலாளிகள் ஆக்க போகிறோம் என்று.நாங்கள் இதை 5 வருடத்திற்கு முன்னரே தொண்டமான் அவர்கள் சொன்னார.; தோட்டங்கள் எல்லாம் பிரித்து கொடுக்கப்பட்டு சிறுதோட்டமுதலாளிமார் ஆக்க வேண்டும். என்று அவர் மிகவும் அக்கறையுடன் இருந்தார்.தேர்தல் வந்தவுடன் தான் சிலருக்கு ஆயிரம் ரூபா, சிறுதோட்ட முதலாளிமார்,பெருந்தோட்டங்களில் உள்ள குறைகள் எல்லாம் தெரிகிறது.