இதன் போது உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் இறைவனுடைய பேரருளைக்கொண்டு தன்னுடைய முயற்சியால் சுமார் 100 மில்லியன் ரூபாவிற்கு இறக்காமம் மற்றும் வரிப்பத்தான்சேனை பகுதிகளுக்கான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக வரிப்பத்தான்சேனை பிரதேசத்துக்காக கிராமிய வைத்தியசாலை, ஜும்மா பள்ளிவாயிலுக்கான மிம்பர் அமைத்தல், ஜும்மா பள்ளிவாயிலுக்கான ஒலிபெருக்கி அமைத்தல் மற்றும் ஜும்மா பள்ளிவாயிலுக்கான சுற்றுமதில், அஸ்ரப் வித்தியாலயத்திற்கு போட்டோபிரதி இயந்திரம், மையவாடி சுற்றுமதில், வாங்காமம் நீர்வழங்கல் ஒழுங்கை வீதி அமைப்பு, ஹைபு வீதி மற்றும் வடிகால் வீதி என்பன கடந்த 4 வருடங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திகளாகும்.
இன்ஷா அல்லாஹ் இதைவிட அதிகமான சேவைகளை வரிப்பாத்தான்சேனை வாழ் உறவுகளுக்காக தான் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். இவ்வாறு பாரபட்சமில்லாத அபிவிருத்திகளை செய்த தனக்கு மக்கள் ஒரு தெரிவை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.