புத்தளம் மக்களை வெட்கித் தலைகுனிய வைத்த சஜித் பிரேமதாசவின் கருத்து - பாராளுமன்ற வேட்பாளர் எம்.எஸ்எம். ஸப்வான்


ஜித் பிரேமதாசவினால் இனவாத முத்திரை குத்தப்பட்டதற்கு பின்னரும் தராசு கூட்டணியினருக்கு வாக்களிக்க நினைப்பது எம் சமூகத்தின் மடமையை வெளிக்காட்டுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் உலமா கட்சி சாபில் விமானம் சின்னத்தில் போட்டியிடும் 9 ஆம் இலக்க வேட்பாளர் எம்.எஸ்.எம். ஸப்வான் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது;

'புத்தளத்தில் தராசு சின்னத்தில் போட்டியிடுவோர் இனவாதிகள்,

அப்படியான இனவாதிகளுக்கு எம்மிடம் இடமில்லை, ஓருபோதும் அவர்களை நான் சேர்க்கவே மாட்டேன், அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்' என அன்மையில் புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிதிருந்தார்.

இதனால் புத்தளம் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரவுப் ஹக்கீமின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிபலிக்கும் வேட்பாளர்களை உள்ளடக்கிய தராசு கூட்டணியினரையே இவ்வாறு சஜித் பிரேமதாச விமர்சித்தமையால் குறித்த வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் உலமா கட்சி பாராளுமன்ற வேட்பாளர் ஸப்வான் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியனர் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுகின்ற அதே வேலையில் ரவுப் ஹக்கீமின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிபலிப்போர் ரவுப் ஹகீமின் மருமகன் இனாமுல்லாவின் கட்சியில் இணைந்து தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

புத்தளத்தில் போட்டியிடும் இரு கட்சியினரும் இதுவரைக்கும் தமது கட்சி தலைவர்களையும் கட்சியையும் முன்னிலைப்படுத்தி தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் தமது தலைமைகளின் வழிகாட்டலில் தான் செயற்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்படி புத்தள விவகாரம் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில் கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் வன்னியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் சஜித்தின் டெலிபோன் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றனர்.

ரவுப் ஹகீம் மற்றும் ரிஷாட் பதியுதீனின் கட்சிகளை பிரதிபளிப்போர் இனவாதிகள் என்றால் சஜித் பிரேமதாஸவின் கூற்றின் படி அவர்களை வழிநடாத்தும் தலைவைர்களான ஹக்கீமும் ரிஷாட்டும் இனவாதிகளாகத் தானே இருக்க வேண்டும் என்பது இங்கு நாம் புரிய வேண்டிய மற்றுமொறு விடயம்.

ஒவ்வொரு தேர்தலில் சரியான பாதையை தேர்ந்தெடுக்காததன் விழைவாக புத்தளத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இலக்கப்பட்டு வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியில் அங்கம் வகிப்போர் உள்ளடங்கலான கூட்ணி சுயேடசையில் போட்டியிட்டும் எதனையும் சாதிக்க முடியவில்லை.

தொடர்ச்சியாக இவ்வாறே புத்தளம் தோழ்வியை கண்டுவருகிறது;.

அடுத்துää கூட்டணியில் இணைந்து கொண்ட எவரும் அரசியலுக்கு புதிதானவர்கள் அல்ல. பாராளுமன்றம் கண்டவர்கள்ää மாகாண நகர சபைகளில் காலங்காலமாக இருந்தும் போட்டியிட்டும் வருபவர்கள் தான். இவர்களை பாராளுமன்றுக்கு அனுப்பி புதிதாக எதையும் சாதித்து விட முடியாது. புத்தள மக்களில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் இருக்கும் உரிமைகளை தக்கவைக்கவும் சகல வழிகளிலும் முன்னேற்றத்தை கொண்டு வரவும் புதியதோர் இளம் புரட்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏமற்ற அரசியலில் இருந்து எம் சமூகம் விடுபட்டடு புதிய விடிவை நோக்கி நகரவேண்டும் என விமானம் சின்ன பாராளுமன்ற வேட்பாளர் ஸப்வான் மேலும் தெரிவித்தார்.

இறுதியாக, புத்த‌ள‌ம் வாழ் முஸ்லிம்கள் புரிய வேண்டியது;

த‌ராசுக்கு வாக்க‌ளிப்ப‌தன் மூல‌ம் ஒருவரை வெற்றிபெறச் செய்தாலும் அவ‌ர் ம‌ஹிந்த‌வுட‌ன் சேர‌வும் முடியாதுஇ ச‌ஜித்துட‌னும் சேரவும்‌ முடியாது.
இது புத்த‌ள‌ம் வாழ் முஸ்லிம்க‌ளுக்கு மிகவும் ஆப‌த்தான‌தாகும்.

ஆக‌வே த‌னித்துவ‌ க‌ட்சியாக‌வும் ஆளும் பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் இணைந்து கொண்ட‌ முத‌லாவ‌து முஸ்லிம் க‌ட்சியுமான‌ உலமா க‌ட்சி விமான‌ம் சின்ன‌த்தில் போட்டியிடுகிற‌து.

அத‌ற்கும் அத‌ன் வேட்பாள‌ர்க‌ளுக்கும் வாக்க‌ளித்து அவர்களை அமோக வெற்றியீட்டச் செய்து புத்த‌ள‌த்தின் த‌ன்மான‌ம் காக்க புத்த‌ள‌ம் வாழ் முஸ்லிம்கள் முன் வர வேண்டும் எம்.எஸ்.எம். ஸப்வான் தெரிவித்தார்
ஊடகப் பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -