குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் தீர்க்கலாம் என்பது தொடர்பான யோசனைகள் அடங்கிய பொறிமுறையை தயாரித்துவருகின்றோம்."-தினேஷ்குமார்


" பெருந்தொட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவ்வாறு குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் தீர்க்கலாம் என்பது தொடர்பான யோசனைகள் அடங்கிய பொறிமுறையை தயாரித்துவருகின்றோம்.". - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் வேலாயுதம் தினேஷ் குமார், மக்கள் மத்தியில் உரையாற்றும்போது இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
" மலையகத்தில் வாழும் மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு விசேட செயலணியொன்று அமைக்கப்படும் என்றும், பிரதமரின் நேரடி கண்காணிப்பின்கீழ் அது இயங்கும் என்றும் எனது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பை வரவேற்பதுடன், அந்த செயலணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும். அதற்கு தயாராகவே இருக்கின்றேன்.
அட...! இவர்களால் தேர்தலில் வெற்றிபெறமுடியாது, பிறகு எப்படி செயலணி அமைப்பது என சிலர் கொக்கரிக்கலாம். ஆனால், இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக தென்படுகின்றது. எனவே, சஜித் தலைமையில் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம். நுவரெலியா மாவட்டத்திலும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்வோம்.
குறிப்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்தேன். தற்போது பிரச்சாரத்துக்கு சென்றால்கூட மக்களின் கருத்துகளை கோரிவருகின்றேன். இதற்கமைய குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் எவ்வாறு பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையை விசேட செயலணியிடம் கையளிப்பேன்.
அவற்றை செயல்படுத்துவதற்கு அழுத்தமும் கொடுப்பேன்.
சிலவேளை, மாற்று தரப்புக்கு மக்கள் ஆணைவழங்கினால்கூட ஜனாதிபதியிடம் குறித்த திட்டம் கையளிக்கப்படும்.

குளவி தாக்குதல், தொழில் பாதுகாப்பு, நியாயமான சம்பளம், சுகாதார மேம்பாடு உட்பட சில விடயங்களை குறுகிய காலத்துக்குள் தீர்க்கலாம். இப்படி மூன்று கட்டத்துக்குள் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு, விஞ்ஞானப்பூர்வமான அதற்கான பொறிமுறை தயாரிக்கப்படும்.
எனவே, தூரநோக்கு சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் எம்மிடம் உள்ளது. சமுக மாற்றத்துக்காக எமது திட்டங்களை அமுல்படுத்துவதற்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும்." - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -