முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல மற்றும் துசித திலும் குமார ஆகியோரே இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலேயே இந்த மூவரும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த மூவரும் எதிர்வரும் ஒகஸ்ட் 20 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.