சகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற நடவடிக்கை எடுப்பேன்-கருணா அம்மான்


பாறுக் ஷிஹான்-
நாட்டில் முன்னெப்போதும் இல்லாதவாறு சகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக நாளை இடம்பெறவுள்ள தபால் வாக்களிப்பு தொடர்பில் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

அரச ஊழியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அம்பாறை தமிழ் அரச ஊழியர்களுக்கு மிக முக்கியமான தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளனர்.வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சந்தர்பத்தில் சகல அரச நிலை உத்தியோகத்தர்களுக்கும் முன்னேப்போதும் இல்லாதவாறு சுயகெளரவம் வழங்கப்படும் என்பதில் ஐயம் இல்லை அரச சுற்றுநிரூபங்கள் முறையாக செயற்படுத்தபட்டு உத்தியோகத்தர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் இதன் மூலம் அரச உத்தியோகத்தர்கள் பயமின்றி தமது பணியை மேற்கொள்ளலாம் .முக்கியமாக அரச உயரதிகாரிகளினால் முறைகேடாக நிறுத்தப்படும் இடம்மாற்றங்கள்இ தேவையற்ற ரீதியில் இடம்மாற்றங்கள் செய்வதுஇ பழிவாங்கல் வேலைப்பழு அரசியல் போன்ற விடயங்களை நிறுவன ரீதியாக எதிர்கொள்ள அம்பாறை தமிழ் மக்களுக்கு அதிகாரத்துவம் வாய்ந்த ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பாரளுமன்ற ஒருவரை பெறுவதற்கு இம்முறை அம்பாறை தமிழ் அரச ஊழியர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரச உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகளில் உள்ள தடைகள் சம்பள ஏற்றத்தாழ்வுகள் போன்றன பிரச்சனைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் முறையான இடமாற்ற கொள்கையை பின்பற்றுவதன் ஊடாக உத்தியோகத்தர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் அனுபவிக்கும் சலுகைகள் போன்று எமது மாவட்டத்திற்கும் அச்சலுகைகள் கிடைக்க ஆவண செய்யப்படும் எனவும் அரசியல் பழிவாங்கலுக்குட்பட்ட அலுவலர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -