தொழில் வழிகாட்டல் நிலையம் ஹட்டனில் திறந்து வைப்பு.



ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையினை வளம்பெறச் செய்து அதனூடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் முகமாக இப்பிரதேசத்தில் காணப்படும் தொழில் வாண்மையாளர்களை ஊக்குவிப்பதற்காக சேவை நோக்கம் கொண்டு பீனிக்ஸ் லங்கா என்ற நிறுவனம் ஹட்டனில் டன்பார் விளையாட்டு திடலுக்;கருகாமையில் தொழில் வழிகாட்டல் நிலையம் ஒன்றினை இன்று (13) பகல் திறந்து வைத்தது
குறித்த நிறுவனத்;

தினூடாக பிரதேசத்தில் வாழும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிக்காக தொழிற் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்பு, உயர்கல்வி ஆலோசனை வழிகாட்டல்,வெளிநாடு செல்பவர்களுக்கான ஆலோசனை,வியாபார ஊக்குவிப்பு, சந்தைப்படுத்தல் உதவிகள், முதலீட்டாளர்களை ஊக்குவித்தல்,சாரதி அனுமதி பத்திரம்,ஐ.எஸ்.ஓ. மற்றும் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ்கள் ஆகிய சேவைகள் இந்நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

குறித்த நிறுவனத்தின் சேவைகள் மூன்று மாவட்டங்களில் இடம்பெற்று வருவதாகவும் அதனூடாக பலர் நன்மையடைந்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.ரிப்னாஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதேச கிராமசேவகர்கள் நிதிநிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -