குண்டர்களும், குடிகாரர்களுமின்றி தேர்தல் நடவடிக்கையில் ஹாபிஸ்.


பொதுவாக அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் சண்டியர்களுக்கும், குண்டர்களுக்கும், குடிகாரர்களுக்குமே முன்னுரிமை வழங்குவார்கள். முதலில் தேடிச்செல்வதும் அவர்களைத்தான். அரசியல்வாதிகளின் இல்லங்களுக்கோ அல்லது தேர்தல் செயலகங்களுக்கோ சென்றால் இவ்வாரானவர்களை கடந்த பின்புதான் அரசியல்வாதிகளை சந்திக்க முடியும்.

இதற்கு எந்தக் கட்சியோ, எந்த இனமோ, எந்த மதனோ விதிவிலக்கல்ல. பொதுவாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்றுவருகின்ற ஓர் அரசியல் கலாச்சாரமாகும். அரசியல் என்றால் வன்முறை சார்ந்தது என்ற தோற்றத்துக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
ஆனால் முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னத்தின் இரண்டாம் இலக்க வேட்பாளருமான அல்-ஹாபில் நசீர் அஹமத் அவர்கள் இந்த சம்பிரதாயத்திலிருந்து வேறுபட்டவர்.
அவரது ஏறாவூர் இல்லத்துக்கோ அல்லது தேர்தல் நடவடிக்கை காரியாலயத்துக்கோ சென்றால் அங்கு குண்டர்களுமில்லை, சண்டியர்களுமில்லை, குடிகாரர்களுமில்லை.
அவ்வாரென்றால் அங்கு யார் அரசியல் செய்கிறார்கள் ? இவ்வாறானவர்கள் இல்லாமல் அரசியல் செய்ய முடியுமா ?

இதுதான் ஆச்சர்யமான விடயமாகும். அதாவது மௌலவிகள், ஹாபிஸ்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், ஆட்டோ சங்கத்தினர்கள், மீன்பிடி சங்கத்தினர்கள், விவசாயிகள், நாளாந்த வேலை செய்பவர்கள், உத்தியோகத்தர்கள் என பலதுறைகளை சேர்ந்தவர்கள் அங்கு இரவு பகலாக தேர்தல் வேலைகள் செய்வதனை காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன் அவரது அரசியல் காரியாலயத்துக்கு செல்கின்றவர்களை இவ்வாறானவர்களே இன்முகத்துடனும், புன்னகையுடனும் வரவேற்கின்றார்கள்.
தான் அல்-குர்ஆணை சுமந்த ஹாபிஸ் என்பதனால் இறைவன்மீது மட்டும் நம்பிக்கை கொண்டதன் காரணமாக முழுக்க முழுக்க இறைவனை நம்பியே அரசியல் செய்கின்றார்.

அதனால்தான் அரசியல் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அரசியலுக்காக சாராயமோ, கஞ்சாவோ தன்னால் வாங்கிக்கொடுத்து சமூகத்தை வழிகெடுத்த பாவத்துக்கு ஆளாகமுடியாது என்ற நிலைப்பாட்டில் அல்-ஹாபில் நசீர் அஹமத் அவர்கள் உறுதியாக உள்ளார்.
இதனை ஏனைய அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக கொள்வதுடன், அவரது வெற்றிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -