அம்.தமிழர்களில்உண்மையானபற்றிருந்தால் த.தே.கூ.இராஜினாமாசெய்து வாருங்கள்!
காரைதீவின் இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கருணா அம்மான் அறைகூவல்.
காரைதீவு நிருபர் சகா-கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு உண்மையில் தடையாகவிருந்தது ஹரீஸ் அல்ல மாறாக இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்தான்.
இவ்வாறு நேற்றிரவு(28) காரைதீவின் தென்கோடியில் இடம்பெற்ற காரைதீவுக்கான இறுதித் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட தலைமை வேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
உண்மையில் அம்பாறை மாவட்டத்தமிழர்கள்மீது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கு உண்மையான பற்று பாசமிருந்தால் இராஜினாமாச் செய்துவிட்டு வாருங்கள். என்றும் பகிரங்கமாக அறைகூவல் விடுத்தார்.
இவ் இறுதிக்கூட்டம் அ.இ.த.மகாசபை காரைதீவு வேட்பாளர் தியாகராசா ஞானேந்திரன்(வின்சன்) தலைமையில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்துகொணடனர்.
அங்கு கருணா அம்மான் மேலும் உரையாற்றுகையில்:
இம்முறை உலகம் ஆவலோடு எதிர்பார்த்து வியந்து பார்க்கின்ற தேர்தலாக அம்பாறை மாவட்ட தேர்தல் திகழ்கிறது.
புலம்பெயர் எமது இனிய உறவுகள் இத்தேர்தலுக்காக எமக்கு உதவிவருகின்றனர். காரைதீவு மண்ணைச்சேர்ந்தவர்களும் உதவியுள்ளனர்.
அம்பாறை மாவட்ட தமிழ் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற தமிழ்இளைஞர்கள் திரண்டுவிட்டனர். அந்த இளைஞர் புரட்சி வீறுகொண்டு எழுந்து வெற்றிநடைபோடுகிறது. இது நான் அழைத்த கூட்டமல்ல. தானா சேர்ந்த கூட்டம்.இளைஞர்கள் தேடித்தேடி வருகின்றனர். பல வருடங்களுக்குப்பிறகு அம்பாறைத்தமிழர்கள் கப்பல் என்ற ஒரு குடையின்கீழ் ஒன்றிணைந்திருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன்.
உண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களில் காணப்படும் ஒழுக்கம் கட்டுப்பாடு நேர்மை அர்ப்பணிப்பு போன்றவற்றை நான் வேறெந்த பகுதியிலும் காணவில்லை. ஒருவராவது வந்து பணம் தாருங்கள் சாராயம் தாருங்கள் என கேட்கவில்லை.
ஆனால் கோடீஸ்வரன் 10ஆயிரம் சோட்டிகள் 10ஆயிரம் சாறன்களோடு தயாராகிறாராம். முதலில் அவரொரு சோட்டியைப் போட்டால் நல்லது.
அண்மையில் வினாயகபுரத்துள் அவர் 3000ருபா பணத்துடன் ஒரு சாராயக்குப்பியையும் கொண்டுபோய் மக்களுக்கு கொடுக்குவெளிக்கிட்டாராம். அந்த மக்கள் விரசிஅனுப்பிவிட்டனர்.
த.தே.கூட்டமைப்பினர் மிகவும் ஆவேசத்துடன் கோபமாகக் கத்துகின்றனர். எதிரி கோபப்படுகிறான் என்றால் அவன் தோற்றுவிட்டானென்று அர்த்தம். அந்தநிலை இன்று அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நான் ஒருபோதும் துவேசம் பேசவில்லை. முஸ்லிம் மக்கள் நல்லவர்கள். ஆனால் இனவாதம் பேசித்திரிகின்ற ஒருசில முஸ்லிம் தலைவர்களின் ஆவேச துவேச பேச்சுக்கு பதிலளிக்கவேண்டியுள்ளது. அவர்களது திமிரை அடக்குவேன். 26வருடங்கள் போராட்டத்தில் உலகறிந்த தளபதியாகவிருந்தேன்.2தடவைகள் பாராளுமன்றில் இருந்துள்ளேன். என்னிடம் அவ்hகளது பாச்சா பலிக்காது. அதற்கு த.தே.கூட்டமைப்பினரை பார்த்துக்கொள்ளட்டும்.
கல்முனையை தரமாட்டேன் என்கிறார் ஹரீஸ். கல்முனை தமிழனின் பூர்வீக மண். அதைத்தர இவர் யார்? தன்னிடம் அரசியல் படிக்க வரட்டாமென்று அதாவுல்லா சொல்கிறார். இவங்கட இந்தக்கதைக்கு எந்த தமிழ்தலைவராவாது எதிர்ப்புத்தெரிவித்தானா? இதற்குள்தான் தேசியம். அவர்கள் பேசமாட்டார்கள். ஏனெனில் தமிழரசுக்கட்சியின் உபதலைவர் மொகமட் இமாம் என்பவர் இருக்கிறார்.
தெரியாமல் கேட்கிறேன். கல்முனை என்ன ஹரீசின் பொண்டாட்டியின் சொத்தா? கருணாவிடமிருந்தும் ஞானசாரதேரரிடமிருந்தும் கல்முனையைக் காப்பாற்றப்போகிறாராம் ஹரீஸ். இப்படி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த சிலுசிலுப்பிற்கெல்லாம் பயப்படுபவன் தமிழனல்ல.
இங்கொரு சிவத்த தொப்பி போட்டி மௌலவியாம். அவர் சொல்றார் இராவணன் ஒரு முஸ்லிமாம். இல்ல தெரியாமல் கேட்கிறன் இவரா இராவணனுக்கு சுன்னத்து வைத்த? இராவணன்ட வரலாற்றுக்கும் இவங்கட வரலாற்றுக்கும் என்ன தொடர்பு? இவனுகளை சும்மாவிட்டா காரைதீவுச் சந்தியிலுள்ள சுவாமி விபுலாநந்தர் சிலைக்குத் தொப்பியைப் போட்டுவிட்டு அவரொரு ஹாஜியார் என்றும் சொல்வானுகள்.
இந்தோனோசியாவிலிருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள்தான் இவர்கள். அதனால்தான் வந்Nதுறுகுடிகள் என்பது. அப்படி அவர்கள் குடியேறிய இடம்தான் கல்முனைக்குடி. பூர்வீகமாக தமிழன்மட்டுமே வாழ்ந்துவந்த கல்முனை நகரத்தில் கடையமைத்துவிட்டு அது அவர்களுடையதாம். கல்முனையை தமிழன் பழையபடி வாழக்கூடாதென்பதற்காக கல்முனைக்குடியை கல்முனையுடன் இணைத்துவிட்டு கல்முனை முஸ்லிம்களின் முகவெற்றிலையாம். எப்படியிருக்கிறது அவர்களது விளையாட்டு.
இது ஒன்றுமே வாய்க்காது. அதற்கு விடவும் மாட்டேன்.
பலதடவைகள் மத்திய அரசைக் காப்பாற்றிய த.தே.கூட்டமைப்பு ஒரு தமிழ் இளைஞனுக்கு ஒரு தொழிலையாவது வழங்கியதா? எனவே இனியாவது அவர்கள் திருந்தி மக்களுக்கு சேவையாற்றமுன்வரவேண்டும். மக்களை ஏமாற்றவேண்டாம். என்றார்.