பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை காசிம் வீதியில் தேர்தல் அலுவலக திறந்து வைக்கும் நிகழ்வும் கருத்தரங்கும் நேற்று இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம்.எச்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு முன்னாள் இராஜங்க அமைச்சரும், கல்முனைத் தொகுதி வேட்பாளருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தினை திறந்து வைத்து தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இதில் வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் உள்ளிட்ட வேட்பாளர்கள் தமக்கு வாக்களிப்பது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் எஸ்.டி.எல்.அப்துல் மஜீட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்ஜெமீல், எம்.எஸ்.உதுமாலெப்பை, ஸ்ரீpலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் மன்சூர்.ஏ.காதர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிஸ்தர்கள், போராளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவ அடையாள அட்டை கல்முனை மாநகர சபையின் 16ஆம் வட்டாரத்திலுள்ள அங்கத்தவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.